மெஹந்தி வைப்பவர்களுக்கு நடிகர் மனோபாலா அட்வைஸ்..!

Report Print Abisha in பொழுதுபோக்கு

மணப்பெண் கையில் மெஹந்தி வைத்ததால், மனோபாலா மகன் திருமணப் பதிவில் சிக்கல் ஏற்பட்டதால் மெஹந்தி வைக்கும் பெண்களுக்கு அவர் ஒரு டிவிட்டர் பதிவிட்டுள்ளார்.

காமெடி நடிகர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் எனப் பல முகங்கள் கொண்டவர் மனோபாலா. இவருடைய மகன் ஹரிஷுக்கும் பிரியா என்பவருக்கும், சென்னை திருமணம் நடைபெற்றது

இதில் பல தலைவர்கள் நடிகர்கள் உள்ளிட முக்கி பிரமூகர்கள் கலந்து கொண்டனர்.

திருமணம் முடிந்தது மணமக்கள் வெளிநாடு செல்ல உள்ளதால் உடனடியாக திருமணத்தை பதிவு செய்ய முற்பட்டனர். இந்நிலையில் மணப்பெண் பிரியா கையில் மெஹந்தி வைத்திருந்ததால், அவருடைய ரேகை மெஷினில் பதிவாகவில்லை. சிலமுறை முயற்சித்தும் பதிவாகததால், பின்னர் கட்டைவிரலில் உள்ள மெஹந்தியை முயற்சி செய்து நீக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டது.

இதுகுறித்து தனது ட்விட்டரில் பக்கத்தில் பதிவிட்டுள்ள மனோபாலா, ‘கட்டை விரல் தவிர மற்ற இடங்களில் மெஹந்தி வைத்துக் கொள்ளுங்கள் என்றும், குறிப்பாக, வெளிநாடு செல்பவர்களுக்கு கவனம் தேவை என்றும், குறிபிட்டுள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்