ரஜினிகாந்தின் மகள் திருமணத்தில் குத்திக்காட்ட அப்படி செய்தேனா? நடிகர் பார்த்திபன் பேட்டி

Report Print Deepthi Deepthi in பொழுதுபோக்கு

நடிகர் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சௌந்தர்யாவின் திருமண பரிசாக நடிகர் பார்த்திபன் வெள்ளை நிற ரோஜாவை பரிசாக அளித்தார்.

அது பார்ப்பதற்கு தாமரை போன்று இருந்துள்ளது. நடிகர் ரஜினிகாந்த் பாஜக கட்சியின் ஆதரவுடன் அரசியலுக்கு வரவிருப்பதாக செய்திகள் ஏற்கனவே வெளியாகின.

மேலும், பாஜகவின் சின்னம் தாமரை. இதனால் பார்த்திபன் இப்படி ஒரு பரிசை வழங்கியதாக பேச்சுக்கள் வெளியாகின.

ஆனால், இதனை மறுத்த பார்த்திபன், நான் ஏற்கனவே சௌந்தர்யாவின் முதல் திருமணத்தில் வித்தியாசமான பரிசுப்பொருளை வழங்கிவிட்டேன், இதனால் நன்றாக மலர்ந்த வெள்ளை ரோஜாவை வாசனை திரவியத்துடன் பரிசாக வழங்கினேன்.

மற்றவர்கள் செய்து வைத்த பரிசுப்பொருளை கொடுப்பதை நான் எப்போது விரும்பவில்லை, மேலும் அரசியல் ரீதியாகவும் நான் இதனை குத்திக்காட்டவில்லை என கூறியுள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers