இறப்பதற்கு முன் இளம் நடிகை யாஷிகாவின் உருக்கமான கடிதம்: காதலன் சிறையில் அடைப்பு

Report Print Deepthi Deepthi in பொழுதுபோக்கு

நடிகை யாஷிகாவின் தற்கொலைக்கு காரணமான அவரது காதலனை கைது செய்து பொலிசார் சிறையில் அடைத்துள்ளனர்.

திருப்பூரை சேர்ந்த 21 வயதான இளம் நடிகை யாஷிகா, மன்னர் வகையறா' படத்தில் நடித்தவர் பல்வேறு படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்துள்ளார்.

யாஷிகாவுக்கும் பெரம்பூரைச் சேர்ந்த மோகன் பாபு என்ற இளைஞருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது.

பெரவள்ளூர் பகுதியில் தனியாக வீடு எடுத்து, திருமணம் செய்துகொள்ளாமல் இருவரும் வாழ்ந்துவந்தனர்.

சில நாள்களுக்கு முன், இருவருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது. கோபமடைந்த அரவிந்த், தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டார். இதனால், யாஷிகா வேதனை அடைந்தார். நேற்று முன்தினம், வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

மேலும் தன்னை நம்பி வந்த பெண்ணை ஏமாற்றிய காதலன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டு என தனது தாயக்கு கடைசியாக வாட்ஸ் அப்பில் தகவல் அனுப்பியிருந்தார்.

இந்நிலையில், யாஷிகாவின் வீட்டில் சோதனை செய்தபோது அவர் தனது காதலன் மோகன்பாவுக்கு எழுதிய உருக்கமான கடிதம் சிக்கியது.

இதனைத்தொடர்ந்து யாஷிகாவின் காதலன் மோகன்பாபு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்