முஸ்லிம் மதத்துக்கு மாறினார் டி.ராஜேந்தரின் மகன்: வைரலாகும் வீடியோ

Report Print Raju Raju in பொழுதுபோக்கு

டி.ராஜேந்திரின் இரண்டாவது மகன் குறளரசன் இஸ்லாம் மதத்துக்கு மாறியுள்ளார்.

இயக்குனர், நடிகர் டி.ராஜேந்தருக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.

மூத்த மகன் சிம்பு ஹீரோவாக நடித்து வருகிறார். இரண்டாவது மகன் குறளரசன், பாண்டிராஜ் இயக்கிய ’இது நம்ம ஆளு’ படத்துக்கு இசை அமைத்தார். மகள் இலக்கியாவுக்கு திருமணமாகிவிட்டது.

இந்நிலையில் தாய் உஷா, தந்தை டி.ராஜேந்தர் முன்னிலையில் குறளரசன் இஸ்லாம் மதத்துக்கு நேற்று மாறினார். சென்னை அண்ணாசாலை மெக்கா மசூதியில் இதற்கான நிகழ்ச்சி நடந்தது.

இதுபற்றி டி.ராஜேந்தரிடம் கூறுகையில், எம்மதமும் சம்மதம், ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற கொள்கையை பின்பற்றுபவன் நான்.

இதனால் மகனின் விருப்பத்துக்கு மதிப்புக் கொடுத்துள்ளேன்.

என் மூத்த மகன் சிம்பு சிவ பக்தர். மகள் இலக்கியா, கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றுகிறார். குரளரசன், இஸ்லாமை பின்பற்றுகிறார் என கூறியுள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...