இதயம் நொறுங்கிவிட்டது.. சௌந்தர்யா ரஜினிகாந்த் வேதனையுடன் பகிர்ந்த புகைப்படம்!

Report Print Kabilan in பொழுதுபோக்கு

நடிகர் ரஜினிகாந்தின் மகள் சௌந்தர்யா வெளியிட்ட தனது தேனிலவு புகைப்படங்கள் குறித்து நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்ததைத் தொடர்ந்து, தற்போது புல்வாமா தாக்குதல் குறித்த புகைப்படம் ஒன்றை சௌந்தர்யா வெளியிட்டுள்ளார்.

சமீபத்தில் விசாகனை மறுமணம் செய்த சௌந்தர்யா ரஜினிகாந்த், தேனிலவுக்காக ஐஸ்லாந்துக்கு சென்ற புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.

ஆனால், புல்வாமா தாக்குதலில் ராணுவ வீரர்கள் வீர மரணமடைந்த நிலையில் சௌந்தர்யா வெளியிட்ட புகைப்படங்களால் கோபமடைந்து கடும் கண்டனங்களை பதிவு செய்தனர்.

இதனைத் தொடர்ந்து, வீர மரணமடைந்த ராணுவ வீரர்களின் உடல்கள் வைக்கப்பட்ட பெட்டிகளின் புகைப்படத்தை சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அத்துடன் தனது இதயம் நொறுங்கி விட்டதாகவும், ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார். எனினும் சிலர் இதனையும் கிண்டல் செய்து பதிவிட்டு வருகின்றனர்.

இருப்பினும் நபர் ஒருவர், வீரர்கள் வீரமரணம் அடைந்த நிலையில் உங்களின் தேனிலவு புகைப்படங்களை அடுத்த 2 நாட்களுக்கு வெளியிடாதீர்கள் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்