சிவகுமாரை தொடர்ந்து மகன் கார்த்தியையும் டென்ஷன் ஆக்கிய செல்ஃபி

Report Print Abisha in பொழுதுபோக்கு

சிவகுமாரின் செல்ஃபி விவகாரம் குறித்து கிண்டல் செய்யும் விதமாக, கார்த்தியிடம் கஸ்தூரி நடந்து கொண்ட விதம் கார்த்தியை கோபமடைய செய்துள்ளது.

புதிதாக வெளிவர இருக்கும் படம் ஜூலை காற்றில்.இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர்கே.எஸ்.ரவிகுமார் மற்றும் கார்த்தி கலந்து கொண்டானர். இவ்விழாவை நடிகை கஸ்தூரி தொகுத்து வழங்கினார். இதில் கார்த்தியைப் பேச அழைத்தபோது, கையில் செல்போனை வைத்துக் கொண்டு ”இங்கு வாங்களேன்... நம்ம ஒரு செல்ஃபிஎடுத்துக் கொள்ளலாம்" என்று அழைத்தார்.

மீண்டும் கார்த்தியிடம் கையில் செல்போனை வைத்துக் கொண்டே "உங்க அப்பா இங்கு இல்லை.ஆகையால் சீக்கிரமா ஒரு செல்ஃபி எடுத்துக் கொள்ளலாம்" என்று கூறினார். அதற்கு கார்த்தி, இது தேவையில்லாத ஒரு விஷயமாக இருக்கிறது, என்று முகத்தை திருப்பிக்கொண்டு மைக்கில் பேசத் தொடங்கினார்.

அப்போது அவர், செல்ஃபி என்ற விஷயத்துக்கு, ஒருமரியாதையே இல்லாமல் போய்விட்டது. ஒருவரிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுப்பது என்றில்லை. முகத்துக்கு முன்னால் கொண்டுவந்து கேமராவை நிறுத்துகிறார்கள். ஒரு விவஸ்தையேகிடையாது என நினைக்கிறேன், என்று தெரிவித்தார்

மேலும்,போட்டோ எடுப்பதைக் கூட ஒரு மரியாதையாகக் கேட்டு எடுப்பது கூட தெரியாத அளவுக்கு ஆயிட்டோமா…! என்று வருத்தமாக இருக்கிறது என்றும் கூறினார்.

கஸ்தூரியின் நடவடிக்கையை வீடியோவாக எடுத்துபலரும் சமூகவலைதளத்தில் பரப்பி விமர்சித்துள்ளனர்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்