தேர்தல் பிரச்சாரம் செய்ய போகிறாரா நடிகை ஓவியா?

Report Print Kabilan in பொழுதுபோக்கு

கோடி ரூபாய் கொடுத்தால் பிரச்சாரத்திற்கு செல்வீர்களா? என்று கேட்டால் நிச்சயம் மாட்டேன் என்று நடிகை ஓவியா தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் தேர்தலுக்கான கூட்டணி விவகாரங்கள் பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. மறுபுறம் பிரச்சாரத்திற்கு பயன்படுத்த சில கட்சியினர் நடிகர், நடிகைகளை தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியிலும் இறங்கியுள்ளனர்.

இந்நிலையில், நடிகை ஓவியா தன்னை கட்சியில் சேர சில அரசியல்வாதிகள் அழைப்பு விடுத்ததாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,

‘அரசியல்வாதிகள் சிலர் தங்களது கட்சியில் சேர அழைப்பு விடுத்தார்கள். மறுத்துவிட்டேன். என்னை கட்சியில் சேர அழைத்தது யார் என்பதை சொல்ல விரும்பவில்லை.

கோடி ரூபாய் கொடுத்தால் பிரச்சாரத்திற்கு செல்வீர்களா? என்று கேட்டால் நிச்சயம் மாட்டேன். கோலிவுட்டில் நடிகையாக நல்லதொரு இடத்தை பிடிக்கவே ஆசைப்படுகிறேன்’ என தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் ஓவியா நடிப்பில் வெளியான ‘90ml' திரைப்படம் பெரும் சர்ச்சைக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers