நாரதர் வேலையை ஆரம்பித்த நடிகை கஸ்தூரி? சென்னை-பெங்களூரு போட்டி குறித்து அதிரடி கேள்வி

Report Print Santhan in பொழுதுபோக்கு

ஐபிஎல் போட்டியை எதிர்த்து கடந்த வருடம் போராடிய தமிழ் விரும்பிகள் இப்போது எங்கே போனார்கள் என்று நடிகை கஸ்தூரி கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் உள்ளூர் தொடரான ஐபிஎல் தொடர் சென்னையில் இன்று துவங்கவுள்ளது.

முதல் போட்டியிலே சென்னை-பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இப்போட்டி சென்னையில் இருக்கும் சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இதனால் சேப்பாக்க மைதானத்திற்கு இப்போதிலிருந்தே ரசிகர்கள் வரத் துவங்கிவிட்டனர்.

இந்நிலையில் பிரபல திரைப்பட நடிகையான கஸ்தூரி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில்,

இன்று #ஐபிஎல்12 விமர்சையாக துவக்கம். போன வருடம் போராடிய தமிழர் நலவிரும்பிகள் ஏன் இந்த வருடம் காணோம்? ஒருவேளை தமிழ்நாட்டில் காவிரி கரைபுரண்டு ஓடுவதால், கர்நாடக பெங்களூரு அணியும், தமிழ்நாடு சென்னை அணியும் கிரிக்கெட் ஆடுவதற்கு இப்பொழுது யாருக்கும் ஆட்சேபமில்லையோ? #கிரிக்கெட்அரசியல் என ட்விட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதனால் சும்மா இருந்த சங்கை ஊதி எழுப்பியது போல் கஸ்தூரியின் இந்த பதிவைக் கண்டு இணையவாசிகள் பலரும் நாதர் வேலையை கஸ்தூரி செய்ய ஆரம்பித்துவிட்டார் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers