நடிகர் ராதாரவியின் மோசமான பேச்சு: சின்மயி காட்டம்

Report Print Deepthi Deepthi in பொழுதுபோக்கு

நடிகை நயன்தாரா நடிப்பில் வெளியாகவிருக்கும் கொலையுதிர் காலம் திரைப்படத்தில் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய நடிகர் ராதாரவி, அனைவர் முன்னலையிலும் மோசமாக பேசியதற்கு சின்மயி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

நல்ல நடிகையான நயன்தாரா பல சர்ச்சைகளில் சிக்கியுள்ளார். நயன்தாரா பேயாகவும் நடிக்கிறார், சீதாகவாகவும் நடிக்கிறார். அன்று கடவுளாக நடிப்பதற்கு கே.ஆர். விஜயா போன்ற நடிகைகளை தேடுவார்கள், ஆனால் இப்போது யார் வேண்டுமானாலும் நடிக்கலாம்.

ஏனெனில், இப்போதைய சினிமாவில் ரசனை அந்த அளவுக்கு மாறிவிட்டது. பார்த்தவுடன் கும்பிடுகிறவர்களையும் கூப்பிடலாம், பார்த்தவுடன் கூப்பிடுகிறவர்கள் போன்று இருப்பவர்களும் நடிக்கலாம்.

நயன்தாரா பார்த்தாவுடன் கூப்பிடுகிறவர் போல இருக்கிறார் என மோசமான பேசியிருந்தார். இவரின் இந்த கருத்துக்கு, சின்மயி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, எனது பிரச்சனையில் நடிகர் சங்கம் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் கண்டுகொள்ளாமல் இருந்தது. ஆனால், ஒரு முன்னணி நடிகையை இப்படி மேடையில் வைத்து மோசமாக விமர்சித்துள்ள ராதாரவி மீது முடிந்த நடிகர் சங்கம் நடவடிக்கை எடுங்கள் என கூறியள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers