ஜெயலலிதாவாக நடிக்க பிரபல நடிகைக்கு இத்தனை கோடியா? வியப்படைந்த பாலிவுட்!

Report Print Kabilan in பொழுதுபோக்கு

ஜெயலலிதா வாழ்க்கை கதையில் நடிப்பதற்கு நடிகை கங்கனா ரணாவத்துக்கு ரூ.24 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்க, மிஷ்கினிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய பிரியதர்ஷினி, விஜய் ஆகியோர் அறிவித்திருந்தனர்.

இந்நிலையில், விஜய் இயக்கும் ‘தலைவி’ படத்தில் ஜெயலலிதாவாக நடிக்க முன்னணி ஹிந்தி நடிகைகளான வித்யா பாலன், ஐஸ்வர்யா ராய் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடந்து வந்த நிலையில், கங்கனா ரணாவத் நடிப்பது உறுதியானது.

இந்தப் படத்தின் கதையை ‘பாகுபலி’ கதாசிரியர் விஜயேந்திர பிரசாத் எழுதியுள்ளார். இந்நிலையில் கங்கனா ரணாவத்திற்கு ரூ.24 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஹிந்தி நடிகை ஒருவர் தென்னிந்திய படத்தில் நடிக்க வாங்கும் அதிகபட்ச சம்பளம் இதுவாகும். படம் குறித்து இயக்குநர் விஜய் கூறுகையில், ‘முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, இந்தியாவின் முக்கியமான தலைவர்.

அவர் வாழ்க்கைக் கதையை தலைவி என்ற பெயரில் இயக்குவது பெருமையானது. ஜெயலலிதாவாக கங்கனா ரணாவத் நடிப்பது இன்னும் பெருமையான விடயம்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers