நடிகைகள் தப்பான தொழில்..அதை மறந்துட்டீங்களா? நயன்தாரா விவகாரத்தில் ராதாரவி விளக்கம்

Report Print Santhan in பொழுதுபோக்கு

நடிகை நயன்தாராவைப் பற்றி ராதாரவி பேசிய விவகாரம் பெரும் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில், நடிகைகளுக்காக வழக்கு போட்டு ஜெயித்து கொடுத்ததை மறந்துவிட்டீர்களா என்று ராதாரவி விளக்கம் கொடுத்துள்ளார்.

பிரபல திரைப்பட நடிகரான ராதராவி, சமீபத்தில் நடைபெற்ற திரைப்பட நிகழ்ச்சி ஒன்றில் நடிகை நயன்தாராவை மிகவும் மோசமாக பேசினார்.

ராதாரவி திமுக-வில் இருப்பதால், நயன்தாராவின் காதலன் விக்னேஷ் சிவன் ஒரு பெண்ணை இப்படி பேசுகிறார், உங்கள் கட்சி இவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காதா? என்று ஸ்டாலின் மற்றும் கனிமொழிக்கு டுவிட்டரில் டேக் செய்திருந்தார்.

இதையடுத்து ராதாரவி கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் திமுக தற்காலிகமாக நீக்கியது.

இது குறித்து ராதாரவியிடம் கேட்ட போது, அவர்கள் கட்சியில் இருந்து நீக்குவதாக சொன்னார்கள், நானே நீங்கிக் கொள்கிறேன் என்று விலகிவிட்டேன்.

அந்த நிகழ்ச்சியில் கே.ஆர். விஜயாம்மா சாமி வேஷம் போடும்போது, அப்படியே அம்மன் மாதிரியே இருப்பார்.

ஆனால் தமிழில் நடிக்கும் நயன்தாரா, தெலுங்கில் சீதா ரோல் நடிக்கிறார். இங்கு வேறு, அங்கு வேறு என பல கெட்டப்புகளில் நடிக்கிறார்.

இதை நாம் பாராட்டிய ஆக வேண்டும். ஆனால் ஒருவர் நயன்தாராவை எம்.ஜி.ஆர். ரஜினிகாந்த் லெவலுக்கு உயர்த்திப் பேசினார்.

அதை தன்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை அவரை கண்டித்தேன் என்று கூறினார்.

மேலும் சில ஆண்டுகளுக்கு முன்னர் நடிகைகள் தப்பான தொழில் செய்வதாக செய்திகள் வந்தது.

அப்போது அவர்களுக்காக வழக்கு போட்டு ஜெயித்து கொடுத்தேன். அதுமட்டுமின்றி நடிகைகள் பற்றி ஒரு வாரப் பத்திரிகையில் ஒரு தொடர் வந்தப்போது நான், நடிகை ரேவதி, வாசுகி அம்மா மூணு பேரும் அந்த நாளிதழுடன் சண்டை போட்டு அந்த தொடரையே நிறுத்தலையா? அதை எல்லாம் மறந்துவிட்டார்கள்.

கடைசியாக ஒன்று மட்டும் சொல்கிறேன். நான் பேசியது நயன்தாராவையும் அவரை திருமணம் செய்துகொள்ளவிருப்பவரையும் வருத்தப்படும் படி செய்திருந்தால், நான் மனவருத்தமடைகிறேன், இதற்காக அவரின் காலிலா போய் விழ முடியும் என்று கூறியுள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்