கை, காலில் கட்டுகளுடன் நடிகர் விஷால்: என்ன ஆனது அவருக்கு..?

Report Print Abisha in பொழுதுபோக்கு

சண்டைக்காட்சியில் நடித்தபோது நடிகர் விஷாலுக்கு பலத்த காயம் ஏற்பட்டதால், கட்டுபோட்ட நிலையில் தற்போது காணப்படுகிறார்.

சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு துருக்கி நாட்டில் உள்ள கேப்படோக்சியா என்ற இடத்தில் நடைபெற்றது.அங்கு சண்டைக்காட்சி படமாக்கப்பட்டபோது, பைக்கில் இருந்து நிலைதடுமாறி விஷால் கீழே விழுந்துள்ளார்.

இதில் அவருடைய இடது கால் மற்றும் கையில் காயம் ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு விஷாலுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.அவர், சில நாட்கள் ஓய்வெடுக்க வேண்டும் என டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர். எனவே அவர் தற்போது ஓய்வில் இருக்கிறார் என்று தெரிகிறது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்