என்னை வீட்டை விட்டு வெளியேற சொல்கிறார்: நடிகை சங்கீதா மீது தாய் புகார்!

Report Print Deepthi Deepthi in பொழுதுபோக்கு

நடிகை சங்கீதா என்னை வீட்டை விட்டு துரத்துகிறார் என அவரது தாய் பானுமதி தமிழ்நாடு மகளிர் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு சங்கீதாவுக்கு மகளிர் ஆணையம் தரப்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டதையடுத்து தனது கணவருடன் சென்று விளக்கம் அளித்துள்ளார்.

வளசரவாக்கத்தில் தனது தாய்க்கு சொந்தமான வீட்டின் மேல்தளத்தில் சங்கீதா வசித்து வந்துள்ளார். கீழ் தளத்தில் தாய் பானுமதி வசித்துவருகிறார். தற்போது இந்த வீடு சங்கீதாவின் பெயரில் உள்ளது.

ஆனால், அந்த வீட்டை தனது சகோதரர்கள் அபகரித்துக்கொள்வார்கள், அதற்கு தனது தாயும் உடந்தையாகிவிடுவார் என்ற சந்தேகம் சங்கீதாவுக்கு ஏற்பட்டதையடுத்து தாயை வீட்டை விட்டு வெளியேறுமாறு கூறியுள்ளார்.

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் தனது தாயை வீட்டை விட்டு வெளியேற சொல்வது சரியல்ல என இருதரப்பிலும் அறிந்தவர்கள் கூறியுள்ளனர்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்