வாத்தியாரு லதாவை தடவினதை விட அதிகமா தடவுறாங்க என மோசமாக டுவீட் செய்த நடிகை... லதா கொடுத்த பதிலடி

Report Print Raju Raju in பொழுதுபோக்கு

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர், நடிகை லதா குறித்து மோசமாக டுவீட் செய்த நடிகை கஸ்தூரி மன்னிப்பு கேட்க வேண்டும் என நடிகர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐ.பி.எல். போட்டி பற்றி விமர்சித்த நடிகை கஸ்தூரி, என்னய்யா இது. பல்லாண்டு வாழ்க படத்துல வாத்தியாரு லதாவை தடவினதை விட அதிகமா தடவுறாங்க என்று ட்வீட் செய்தார்.

இதை பார்த்த நடிகை லதா கோபம் அடைந்து அவருக்கு கண்டனம் தெரிவித்தார்.

அவர் கூறுகையில், எம்.ஜிஆரையும், என்னையும் தவறாக சித்தரித்து கருத்து பதிவிட்ட கஸ்தூரிக்கு கண்டனத்தை தெரிவிக்கிறேன்

எம்.ஜி.ஆரை தெய்வமா மதிக்கிற கோடானுகோடி ரசிகர்கள் தமிழ்நாட்டுல இருக்காங்க. அவங்களையெல்லாம் ஒட்டு மொத்தமா மன வருத்தப்படுற மாதிரி இப்படியெல்லாம் எழுதலாமா? கஸ்தூரி நடிச்ச அளவுக்கெல்லாம் நான் எந்தப் படத்துலேயும் விரசமா நடிக்கலையே.

கஸ்தூரிக்கு விளம்பரம் வேணும்னா வேற எதையாவது செய்யலாம் என கூறினார்.

இதனிடையில் கஸ்தூரிக்கு நடிகர் சங்கம் சார்பில் ஒரு கடிதம் அனுப்பட்டுள்ளது.

அதில், மூத்த கலைஞர்களை கொச்சைப்படுத்துவதும் அவமதிப்பதும் தவறு. நீங்கள் கூறிய கருத்துக்காக வருத்தம் தெரிவிக்க வேண்டும்.

எதிர்காலத்தில் மூத்த கலைஞர்கள் வருத்தப்படும்படி எந்த செயலையும் செய்ய வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்