தன்னை விட 10 வயது அதிகமானவரை ரகசியமாக திருமணம் செய்து கொண்டது ஏன்? 2 ஆண்டுகளுக்கு பின் உண்மையை உடைத்த பிரபல நடிகை

Report Print Santhan in பொழுதுபோக்கு

பிரபல திரைப்பட நடிகையான மேக்னா நாயுடு டென்னிஸ் நடிகரை ரகசியமாக திருமணம் செய்து கொண்டது ஏன் என்பது குறித்து தெரிவித்துள்ளார்.

நடிகையான மேக்னா நாயுடு கடந்த சில ஆண்டுகளாகவே சினிமாவில் நடிக்காமல் இருந்த அவர், டென்னிஸ் வீரர் ஒருவரை ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாக கூறப்பட்டது.

ஆனால் அதைப் பற்றி மேக்னா எதுவும் கூறாமல், மறைத்திருந்தார்.

திருமணம் முடிந்து இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், திருமணத்தை ஏன் மறைத்தேன் என்பதை மேக்னா இப்போது தெரிவித்துள்ளார்.

அதில், போர்ச்சுக்கீசிய டென்னிஸ் வீரர் Luis Miguel Reisஎன்பவரை காதலித்து வந்தேன்.

கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 25-ஆம் திகதி மும்பையில் திருமணம் செய்துகொண்டோம்.

அதன் பின் குடும்ப வாழ்க்கையை கவனிக்க துவங்கிவிட்டேன். என்னுடைய திருமணம் எளிமையாக நடக்க வேண்டும், பிரம்மாண்டமாக நடப்பதில் எனக்கு விருப்பம் இல்லை.

அதன் காரணமாகவே திருமணம் எளிமையாக முடிந்தது. இது என் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் தெரியும்.

சமீபத்தில் அவரிடம், இதைப் பற்றி நான் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்போகிறேன் என்று அவரிடம் சொன்னேன், அப்போது அவர் உங்களுக்கு இதை அறிவிப்பதில் எது தடுக்கிறது என்று கேட்டதால், இப்போது தெரியப்படுத்துகிறேன் என்று கூறியுள்ளார்.

மேலும் நான் எனது அம்மாவின் பிறந்த நாளன்று திருமணம் செய்துகொண்டேன். என் அம்மாவிடம், பிறந்த நாள் பரிசாக என்ன வேண்டும் லுயிஸ் கேட்ட போது, அப்போது அம்மா உங்கள் திருமணம் தான் என்று சொன்னார்.

இதனால் உடனடியாக, இந்து முறைப்படி மும்பையில் எங்கள் திருமணம் நடந்தது. கிறிஸ்தவ முறைப்படி அடுத்த ஆண்டில் திருமணம் நடக்கும். எங்கள் ஹனிமூன் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

என் அப்பா டென்னிஸ் பயிற்சியாளர். அவர் மூலமாக லூயிஸ் அறிமுகமானார். அவர் என்னை விட பத்து வயது அதிகமானவர். சமூக வலைத் தளம் மூலமாக எங்கள் நட்புத் தொடர்ந்தது. பின் அது காதலாக மாறியது என்று மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்