இன்றைக்கு ராமநவமி! நடிகர் ரித்திஷ் மரணத்தால் அதிர்ச்சியடைந்த நடிகை கஸ்தூரி போட்ட முக்கிய பதிவு

Report Print Santhan in பொழுதுபோக்கு

பிரபல திரைப்பட நடிகரும் முன்னாள் எம்.பி.யுமான ஜே.கே.ரித்திஷ் மாரடைப்பால் மரணமடைந்த நிலையில், இது அவர் இறக்கும் வயதே இல்லை என்று மிகுந்த வேதனையுடன் நடிகை கஸ்தூரி கூறியுள்ளார்.

சின்னபுள்ள படத்தில் நடிகராக அறிமுகமான ரித்திஷ் கானல் நீர், நாயகன், பெண் சிங்கம் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் சமீபத்தில் வெளியான எல்கேஜி படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 2009 மக்களவை தேர்தலில் இராமநாதபுரம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகித்தவர்.

பின்னர் கடந்த 2014-ல் திமுக-வில் இருந்து விலகி அதிமுக-வில் இணைந்தார்.

இன்று இராமநாதபுரத்தில் மோடி பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று வீடு திரும்பிய ரித்திஷ் திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் காலமானார்.

இவரின் இறப்பிற்கு திரைப்பிரபலங்கள் பலரும் தங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வரும் நிலையில், நடிகையான கஸ்தூரி தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில், J K ரித்தீஷ் அவர்கள் மரணம் அடைந்தார் என்று நம்பவே முடியவில்லை. மிக பெரிய அதிர்ச்சி . சிறிது நாட்களுக்கு முன்னர் கூட அவருடன் உரையாடிக்கொண்டிருந்தேனே ! LKG படத்தை பாராட்டி பேசி... ஐயோ கடவுளே! போற வயசே இல்லை. நானும் அவரு age group தான். முதுகெலும்புல பயம் வருது.

மனுஷனுக்கு கட்டம் வைச்ச கணக்கு என்னான்னு புரியவேயில்லை- சாதா ஆளை உச்சத்துல தூக்கி வச்சுது.... மேல மேல போனவரை மொத்தமா மேல போக வைக்குது...

இன்னிக்கு ராம நவமிக்கு கோவில்ல மனமுருக அவருடைய ஆன்மா சாந்தியடவும், எனக்கு இன்னும் ஒரு அஞ்சு வருஷமாவது தவணை கொடுக்கவும் வேண்டிக்குவேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்