இலங்கை குண்டுவெடிப்பு- எங்கள் இதயங்கள் கணக்கின்றன..! உருக்கத்துடன் அனுஷ்கா ஷர்மா

Report Print Kabilan in பொழுதுபோக்கு

இலங்கை குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்டவர்களுக்காக விராட் கோஹ்லியின் மனைவியும், நடிகையுமான அனுஷ்கா ஷர்மா உருக்கத்துடன் ட்வீட் செய்துள்ளார்.

இலங்கை நாட்டின் கொழும்பில் உள்ள ஆறு இடங்களில் நடந்த குண்டுவெடிப்பில் 160 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த கோர சம்பவத்திற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது கண்டனத்தையும், பலியானவர்களுக்கு இரங்கல்களையும் தெரிவித்தார். அதேபோல் இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் விராட் கோஹ்லியும் தனது இரங்கலை தெரிவித்ததுடன், இலங்கை மக்களுக்காக பிரார்த்தனை செய்யுங்கள் என்றும் கோரினார்.

இந்நிலையில் விராட் கோஹ்லியின் மனைவியும், நடிகையுமான அனுஷ்கா ஷர்மா தனது ட்வீட்டர் பக்கத்தில், இலங்கை குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து உருக்கத்துடன் ட்வீட் செய்துள்ளார். அதில் அவர் கூறுகையில்,

‘இலங்கையில் நடந்த துன்பகரமான வன்முறை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட ஒவ்வொருத்தருக்காகவும் எங்கள் இதயங்கள் கணக்கின்றன. அதிர்ச்சியான, துன்பமும், துக்கமும் நிறைந்த இந்த தருணத்தில் நாங்கள் உங்களுடன் இணைந்து பிரார்த்தனை செய்கிறோம்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்