ஒரு நாளின் கொண்டாட்டம் மிகப்பெரிய இழப்பாகியுள்ளது! இலங்கை குண்டுவெடிப்பு குறித்த பிரியங்கா சோப்ராவின் ட்வீட்

Report Print Kabilan in பொழுதுபோக்கு

இலங்கையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு குறித்து நடிகை பிரியங்கா சோப்ரா உருக்கமான ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

நேற்றைய தினம் இலங்கையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த குண்டுவெடிப்பில் 200க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச நாடுகளில் இருந்து அரசியல் தலைவர்களும், விளையாட்டு வீரர்களும், திரைப்பிரபலங்களும் இச்சம்பவத்திற்கு கண்டனத்தையும், இரங்கலையும் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், நடிகை பிரியங்கா சோப்ரா தனது ட்விட்டர் பக்கத்தில் இலங்கை குண்டுவெடிப்பிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், ‘இலங்கையில் கண்ட காட்சிகள் இதயத்தை நொறுங்க செய்தது. ஒரு நாளின் கொண்டாட்டமானது மிகப்பெரிய இழப்பாக மாறியுள்ளது. இந்த கொடூரமான தாக்குதலில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் எனது பிரார்த்தனைகள்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்