இலங்கை குண்டுவெடிப்பு குறித்த நடிகை ஸ்ரீபிரியாவின் பதிவை கிண்டலடித்த நபர்கள்: அவர் கொடுத்த பதிலடி

Report Print Raju Raju in பொழுதுபோக்கு

இலங்கை குண்டுவெடிப்பு பற்றி வருத்தம் தெரிவித்த தனது பதிவிற்கு கீழே கேவலமாக பதிவிடுபவர்கள் மனித தன்மைமைக்கு எதிரானவர்கள் என நடிகை ஸ்ரீபிரியா காட்டமாக தெரிவித்துள்ளார்.

இலங்கையில் நடந்த குண்டுவெடிப்பில் 290 பேர் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக சமூகவலைதளங்களில் பிரபலங்கள் பலரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில் நடிகை ஸ்ரீபிரியாவும் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டார்.

அதில், இலங்கை குண்டுவெடிப்பு பேரதிர்ச்சி அளிக்கிறது...வேதனைக்குரிய செய்தி...மனிதம் எங்கே போயிற்று என குறிப்பிட்டிருந்தார்.

அந்த டுவிட்டர் பதிவை பலரும் கிண்டல் செய்து விமர்சித்து வருவதாக தெரிகிறது. இதனை அறிந்த ஸ்ரீபிரியா டுவிட்டரில் மீண்டும் ஒரு பதிவிட்டுள்ளார்.

அதில், இலங்கை சம்பவத்தை பற்றி வருத்தத்தை தெரிவிக்கும் டுவீட்டுக்கு சம்மந்தமில்லாத கிண்டல் மற்றும் கேவலமான கமெண்ட்களை பதிவு செய்யும் மனிததன்மைக்கு எதிரானவர்களை மகிழ்ச்சியுடன் நான் ப்ளாக் செய்வேன் என கோபமாக பதிவிட்டுள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்