55 வயதில் 4வது திருமணம்.. நான்கு நாட்களில் விவகாரத்து! பரபரப்பை ஏற்படுத்திய ஹாலிவுட் பிரபலம்

Report Print Kabilan in பொழுதுபோக்கு

பிரபல ஹாலிவுட் நடிகர் நிக்கோலஸ் கேஜ் திருமணம் செய்த நான்கே நாட்களில் விவாகரத்து கோரிய விடயம் தெரிய வந்துள்ளது.

55 வயதாகும் ஹாலிவுட் நடிகர் நிக்கோலஸ் கேஜ், ஒப்பனை கலைஞர் எரிகா கோய்கேவை கடந்த மார்ச் மாதம் 23ஆம் திகதி திருமணம் செய்தார். இது நிக்கோலஸுக்கு 4வது திருமணம் ஆகும்.

ஆனால், திருமணமான 4வது நாளிலேயே தனது திருமணத்தை ரத்து செய்ய கோரியும், விவாகரத்து கோரியும் மனுதாக்கல் செய்துள்ளார். இந்த விடயம் அவரது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

இந்த விவாகரத்து தொடர்பாக நிக்கோலஸ் கேஜ் கூறுகையில், ‘திருமணம் ஆவதற்கு முன்பு நானும், கோய்கேவும் அளவுக்கு அதிகமாக மது அருந்தினோம். மது போதையில் இருந்தபோது நாம் திருமணம் செய்து கொள்வோம் என்றார் கோய்கே. நானும் நடப்பது புரியாமல் சம்மதம் தெரிவித்துவிட்டேன்’ என தெரிவித்துள்ளார்.

ஆனால், நிக்கோலஸ் கேஜை காதலித்ததால் தன்னுடைய கெரியர் பாதிக்கப்பட்டதாகவும், கேஜ் தன் மீது சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகளால் தனது பெயர் கெட்டுவிட்டதாகவும் எரிகா குற்றம்சாட்டியுள்ளார்.

கேஜும், எரிகாவும் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் காதலிப்பதாக கூறப்பட்ட நிலையில், லாஸ் வேகாஸில் உள்ள ஹொட்டலில் இருவரும், திருமணமான சில மணிநேரத்தில் சண்டை போட்டுக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்