தங்கம் வென்ற தமிழக வீராங்கனைக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய் சேதுபதி!

Report Print Vijay Amburore in பொழுதுபோக்கு

ஆசிய தடகள போட்டியில் தங்கம் வென்ற கோமதி மாரிமுத்துவுக்கு நடிகர் விஜய்சேதுபதி ரூ.5 லட்சம் ஊக்கத்தொகை கொடுத்துள்ளார்.

கத்தார் நாட்டின் தோஹா நகரில் நடைபெற்ற ஆசிய தடகள போட்டியில், இந்தியாவின் சார்பில் 800 மீ ஓட்டப்பந்தய பிரிவில் கலந்துகொண்ட தமிழகத்தை சேர்ந்த கோமதி மாரிமுத்து, முதலிடம் பிடித்து தங்கப்பதக்கத்தை வென்றார்.

அவருடைய இந்த சாதனைக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து ஊக்கத்தொகையினை அளித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகர் விஜய்சேதுபதி சார்பில் அவரது ரசிகர் மன்ற பொறுப்பாளர்கள் ரூ.5 லட்சத்திற்கான காசோலையை நேரில் சந்தித்து வழங்கியுள்ளனர்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்