பிரபல ஸ்டார் வார்ஸ் பட நடிகர் மரணம்!

Report Print Kabilan in பொழுதுபோக்கு

‘ஸ்டார் வார்ஸ்’ படங்களில் நடித்து பிரபலமான நடிகர் பீட்டர் மேஹ்யூ, தனது 74வது வயதில் காலமானார்.

உலகளவில் மிகவும் பிரபலமான ஹாலிவுட் திரைப்பட சீரீஸான ‘ஸ்டார் வார்ஸ்’-யில் நடித்தவர் பீட்டர் மேஹ்யூ(74). இவர் செவ்பக்கா எனும் கதாபாத்திரத்தில் நடித்தார்.

1977ஆம் ஆண்டு வெளியான ஸ்டார் வார்ஸ் படத்தில் ஹான் சோலோவின் நண்பராகவும், துணை விமானியாகவும் பீட்டர் மேஹ்யூ நடித்தார்.

ஏழடி உயரம் கொண்ட பீட்டர் மேஹ்யூ, டெர்ரர், ஸ்டார் டூர்ஸ், யெஸ்டர்டே வாஸ் டை உட்பட சில படங்களிலும் நடித்துள்ளார். தனது குடும்பத்தினருடன் அமெரிக்காவின் வடக்கு டெக்சாஸ் நகரில் இவர் வசித்து வந்தார்.

SHUTTERSTOCK

இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை பீட்டர் மேஹ்யூ மரணமடைந்து விட்டதாக, அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

ஆனால், அவரது மரணத்திற்கான காரணத்தை அவர்கள் தெரிவிக்கவில்லை. பீட்டரின் மரணம் குறித்து அறிந்த அவர்கள் ரசிகர்கள், சமூக வலைதளங்களில் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

JONATHAN SHORT/INVISION/AP
Getty/Lucasfilm

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்