அது என் தவறு அல்ல.. வேறொருவரின் வாக்கை செலுத்தவில்லை! சிவகார்த்திகேயன் அதிரடி விளக்கம்

Report Print Kabilan in பொழுதுபோக்கு

வேறு ஒருவரின் வாக்கை நான் செலுத்தவில்லை, எனது வாக்கைத்தான் பதிவு செய்தேன் என்று நடிகர் சிவகார்த்திகேயன் விளக்கம் அளித்துள்ளார்.

சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில், வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாமல் நடிகர் சிவகார்த்திகேயன் வாக்களித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. அவர் பதிவு செய்தது கள்ள ஓட்டு என்று விமர்சனங்கள் கிளம்பின.

இந்நிலையில் தன் மீதான விமர்சனங்களுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறுகையில், ‘நாடாளுமன்ற தேர்தலில் நான் வாக்களித்ததை சர்ச்சையாக்கி உள்ளனர். எனது வாக்கைத்தான் நான் பதிவு செய்தேன்.

அதற்கு விளக்கம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. என்னிடம் வாக்காளர் அடையாள அட்டை உள்ளது. நான் இந்த நாட்டின் குடிமகன். எனவே எனக்கு வாக்களிக்க உரிமை உள்ளது. தேர்தல் ஆணையமே அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தது.

ஒரு மாதத்திற்கு முன்பு எனது பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்தது. இப்போது பட்டியலில் இல்லை என்றால் அது என்னுடைய தவறு இல்லை. நான் வேறு ஒருவர் பெயரில் வாக்கை செலுத்தவில்லை. எனது வாக்கைத்தான் பதிவு செய்தேன். இதை கள்ள நோட்டு என்று சொல்வது தவறு.

எல்லோரும் வாக்களித்தது மாதிரி தான் எனது வாக்கை பதிவு செய்தேன். பட்டியலில் பெயர் இல்லாதது எனது தவறு அல்ல. வாக்களிக்க அனுமதித்தவர்களிடம் விசாரணை நடத்தப்படும் என்று தான் தேர்தல் அதிகாரி கூறியிருக்கிறார். என் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றோ, விசாரணைக்கு அழைக்கப்படுவேன் என்றோ அவர் கூறவில்லை’ என தெரிவித்துள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்