800 திரைப்படங்களில் நடித்த பிரபல நகைச்சுவை நடிகர் மாரடைப்பால் மரணம்... கண்ணீர் வரவழைக்கும் புகைப்படம்

Report Print Raju Raju in பொழுதுபோக்கு

பிரபல நடிகர் ரலபள்ளி வெங்கட நரசிம்ம ராவ் மாரடைப்பால் காலமானார்.

தெலுங்கு திரையுலகில் முன்னணி நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகராக திகழ்ந்தவர் நடிகர் ரலபள்ளி வெங்கட நரசிம்ம ராவ் (74).

இவர் 800-க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்து ரசிகர்களில் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.

சில காலமாக கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டிருந்த நரசிம்ம ராவ் கடந்த 15ஆம் திகதி ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

இந்நிலையில் நேற்று மாலை 6.15 மணியளவில் நரசிம்ம ராவுக்கு கடுமையான மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் அவர் உயிரிழந்தார்.

நரசிம்ம ராவ் மருத்துவமனையில் பரிதாப நிலையில் சிகிச்சை பெற்ற புகைப்படம் ஏற்கனவே வெளியான நிலையில் அவரின் மறைவு ரசிகர்கள் மற்றும் திரையுலகினருக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்