உலகப்புகழ் ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் மீது பொதுவெளியில் தாக்குதல்

Report Print Vijay Amburore in பொழுதுபோக்கு

உலகப்புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகரான அர்னால்டு ஸ்வார்ஸ்னேக்கர்-ஐ மர்ம நபர் ஒருவர் திடீரென முதுகு பக்கத்திலிருந்து தாக்கும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகரும், கலிபோர்னியா மாகாணத்தின் முன்னாள் ஆளுநருமான அர்னால்டு ஸ்வார்ஸ்னேக்கர், தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

சர்ட்டன் நகரில் அர்னால்ட் ஸ்போர்ட்ஸ் ஃபெஸ்டிவலில் கலந்துகொண்டு ரசிகர்களிடம் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துக்கொண்டிருந்துள்ளார்.

அப்போது நீண்ட நேரமாக முகுப்புறத்திலிருந்து கையை அசைத்துக்கொண்டிருந்த ஒரு இளைஞர், திடீரென ஓடிவந்து மிதித்துள்ளார்.

இதில் நிலைதடுமாறிய 71 வயதான அர்னால்டை, அங்கு நின்று கொண்டிருந்த பாதுகாப்பு அதிகாரிகள் பத்திரமாக பிடித்தனர். மேலும் அந்த இளைஞரை உடனடியாக பிடித்து சென்றனர்.

இந்த வீடியோ காட்சியானது இணையத்தில் வைரலானதை அடுத்து, அர்னால்டு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், 'உங்கள் கவலைகளுக்கு நன்றி, ஆனால் கவலைப்படுவதற்கு இங்கு ஒன்றுமில்லை. நான் கூட்ட மிகுதியால் இடர்பாட்டில் சிக்கியதாகவே நினைத்தேன்.

உங்களை போல வீடியோவை பார்த்த பின்னரே தெரிந்துகொண்டேன் என பதிவிட்டுள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்