புயலில் வீட்டை இழந்த மூதாட்டியை நெகிழவைத்த நடிகர் ராகவா லாரன்ஸ்

Report Print Vijay Amburore in பொழுதுபோக்கு

கடந்த ஆண்டு ஏற்பட்ட காஜா புயலால் வீட்டை இழந்த வயதான பாட்டிக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் வீடு கட்டி கொடுத்துள்ளார்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வங்க கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது காஜா புயலாக உருவெடுத்து தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் முழுவதையும் சிதைத்து போட்டது.

இதில் விவசாயிகள் பலரும் தங்களுடைய வீடு, மரங்கள் மற்றும் கால்நடைகளை இழந்தனர் .

இந்த சமயத்தில் புயலால் வீடுகளை இழந்து தவிக்கும் சிலருக்கு வீடுகள் கட்டி தருவதாகா நடிகர் ராகவா லாரன்ஸ் அறிவித்திருந்தார்.

சொன்னதை போலவே கடந்த வாரம் ஆலங்குடி கணேஷன் என்பவருக்கு வீடு கட்டிகொடுத்து, கிரகப்பிரவேசத்தில் கலந்துகொண்டார்.

இந்த நிலையில் தற்போது தஞ்சாவூரை சேர்ந்த செல்லகுஞ்சி என்கிற பாட்டிக்கு வீடு கட்டிக்கொடுத்து, கிரகப்பிரவேசத்திலும் கலந்துகொண்டுள்ளார். அவருடைய இந்த நல்ல எண்ணத்தை பொதுமக்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்