தியானம் மேற்கொண்ட மோடி... கலாய்த்த நடிகை...!

Report Print Abisha in பொழுதுபோக்கு

உத்தரகாண்டில் உள்ள கேதர்நாத் கோவிலுக்கு சென்ற பிரதமர் மோடியை நடிகை ட்விங்கிள் கண்ணா மறைமுகமாக தாக்கி ட்விட் ஒன்றை பதிவு செய்துள்ளார்.

இந்தியாவில் மக்களவை தேர்தல் நிறைவடைத்து வாக்க எண்ணிகை நாளை நடைபெற உள்ள நிலையில், பிரதமர் மோடி சில தினங்களுக்கு முன் உத்தரகாண்டில் உள்ள கேதர்நாத் கோவிலுக்கு சென்று கிட்டத்தட்ட 17மணிநேரம் தியானம் செய்தார்.

அவர் தியானம் செய்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின. அதேவேளையில் எதிர்க்கட்சியினர் விமர்சித்தும், பாஜகவினர் உயர்வாகவும் கருத்து பதிவிட்டு வந்தனர்.

இந்நிலையில் பிரபல பாலிவுட் நடிகர் அக்‌ஷய்குமாரின் மனைவியும், நடிகையுமான ட்விங்கிள் கண்ணா தனது ட்விட்டர் பக்கத்தில் மோடியின் தியானத்தை மறைமுகமாக கிண்டலடித்து ட்வீட் செய்துள்ளார்.அதில், கடந்த சில நாட்களாக ஆன்மீக புகைப்படங்களை பார்த்து நானும் அதுபோல் புகைப்படத்தை பதிவிடலாம் என்று எண்ணினேன். முன்னதாக நான் வெளியிட்ட திருமண புகைப்படங்களுக்கு கிடைத்த வரவேற்பைவிட இந்த புகைப்படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று நினைக்கிறேன் எனக் கூறியுள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்