இன்று மாலை முக்கிய அறிவிப்பை வெளியிடுகிறேன்! பிறந்தநாளில் இளையராஜாவின் அறிவிப்பு

Report Print Kabilan in பொழுதுபோக்கு

இசையமைப்பாளர் இளையராஜா இன்று மாலை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இன்று தனது 76வது பிறந்த நாளை கொண்டாடும் இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு, அவரது ரசிகர்கள் சால்வை அணிவித்து, பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து தங்களது மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டனர்.

அப்போது இளையராஜா தனது ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். அதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறுகையில்,

‘வாழ்த்து தெரிவித்த ரசிகர்களுக்கு எப்படி நன்றி கூறுவது என்று தெரியவில்லை’ என தெரிவித்தார். மேலும் இன்று மாலை முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்