தமிழகத்தில் ஹிந்தி கட்டாயமல்ல.. இது ஒரு அழகிய தீர்வு! ஏஆர் ரகுமான் ட்வீட்

Report Print Kabilan in பொழுதுபோக்கு

தமிழகத்தில் ஹிந்தி கட்டாயமல்ல என்ற திருத்தப்பட்ட வரைவு அழகிய தீர்வு என இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தெரிவித்துள்ளார்.

இந்திய அரசின் புதிய கல்விக் கொள்கையின்படி, மும்மொழிக் கொள்கையை கடைபிடிக்க பரிந்துரைக்கப்பட்டது. அதன்படி, ஹிந்தி பேசாத மாநிலங்களிலும் ஹிந்தி மொழி பயிற்றுவிக்கப்பட வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

இந்த மும்மொழிக் கொள்கைக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். குறிப்பாக தமிழகம், கர்நாடகா உட்பட பல மாநிலங்களிலும் இருந்தும் எதிர்ப்புகள் வலுத்தன.

இதனைத் தொடர்ந்து, ஹிந்தி மொழி திணிக்கப்படாது என்று மத்திய அமைச்சர்கள் கருத்து தெரிவித்த நிலையில், திருத்தப்பட்ட புதிய கல்விக் கொள்கை வரைவுத் திட்டத்தை இந்திய அரசு வெளியிட்டுள்ளது.

அதில், ஹிந்தி மொழி பேசாத மாநிலங்களில் ஹிந்தி கட்டாயமாக பயிற்றுவிக்கப்படும் என்ற பரிந்துரை நீக்கப்பட்டுள்ளது, விருப்பத்தின் அடிப்படையில் மூன்றாவது மொழியை மாணவர்களே தெரிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய வரைவு திட்டத்திற்கு பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான்,

‘தமிழகத்தில் ஹிந்தி கட்டாயமல்ல என்ற திருத்தப்பட்டது புதிய வரைவு அழகிய தீர்வு’ என தெரிவித்துள்ளார். முன்னதாக ஹிந்தி கட்டாயம் சர்ச்சையான நேரத்தில், ‘பஞ்சாபிலும் தமிழ் பரவுகிறது’ என பஞ்சாப் சிங் ஒருவர் தமிழ் பாடலை பாடும் வீடியோவை ரகுமான் பகிர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers