மோசமான அம்பயரிங்.. ஐசிசி இதனை விசாரிக்க வேண்டும்! நடிகர் தனுஷ் கருத்து

Report Print Kabilan in பொழுதுபோக்கு

நேற்று நடைபெற்ற அவுஸ்திரேலியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான உலகக்கோப்பை தொடர் லீக் போட்டி குறித்து நடிகர் தனுஷ் கருத்து தெரிவித்துள்ளார்.

நாட்டிங்காமில் நேற்று நடந்த உலகக்கோப்பை லீக் போட்டியில், அவுஸ்திரேலியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் நடுவர்களின் தீர்ப்புகள் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளன.

நடுவர்களான கெஃபானே, ருசிரா பாலியாகுருகே ஆகியோர் தொடர்ச்சியாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக தீர்ப்புகளை வழங்கினர். இறுதியில் அவுஸ்திரேலிய அணி 15 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதனைத் தொடர்ந்து, நடுவர்களின் மோசமான அம்பயரிங் தான் வெஸ்ட் இண்டீசின் தோல்விக்கு காரணம் என்று பலரும் விமர்சித்து வரும் நிலையில், நடிகர் தனுஷ் தனது கருத்தினை பதிவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் தனுஷ் கூறுகையில், ‘மேற்கு இந்தியத் தீவுகள் அணி எந்தக் காரணம் கொண்டும் வெற்றி பெறவே கூடாது என்று நினைத்த நடுவர், மகிழ்ச்சியாக இருப்பார் என நினைக்கிறேன்.

வாழ்த்துக்கள் நடுவரே... நன்றாக ஆடினீர்கள் மேற்கு இந்திய தீவுகள் அணியினரே! மோசமான அம்பயரிங், சிறப்பாக நடந்தது. ஒருதலைப்பட்சமும் கூட. இதை ஐ.சி.சி விசாரிக்க வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்