என் மகளுக்கு 14 வயது... அப்போது நான் அதை சொன்னேன் ! நடிகர் பிரகாஷ்ராஜ் உருக்கம்

Report Print Santhan in பொழுதுபோக்கு

பிரபல திரைப்பட நடிகரான பிரகாஷ்ராஜ் இரண்டாவது திருமணம் செய்து கொண்டது ஏன் என்பது குறித்து விளக்கமளித்துள்ளார்.

உலகம் முழுவதும் நேற்று தந்தையர் தினம் கொண்டாடப்பட்டு வந்த நிலையில், திரைப்பிரபலங்கள் பலரும் தந்தையுடன் எடுத்த புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு, அப்பா பற்றிய சில உருக்கமான தகவல்களை பகிர்ந்திருந்தனர்.

அந்த வகையில் நடிகரான பிரகாஷ்ராஜ் தந்தையர் தினத்தையொட்டி அளித்த பேட்டி ஒன்றில், சொந்த வாழ்க்கையில் தந்தையின் பங்கு முக்கியம்.

இரண்டாவது மனைவியுடன்

எனக்கு 4 குழந்தைகள். அதில் ஒரு குழந்தை இறந்து விட்டது. குழந்தைகளுக்கு வெளி உலகம் நிறைய கற்று கொடுக்கிறது. அவர்களை இப்படித்தான் வாழ வேண்டும் என்று கட்டாயப்படுத்தக் கூடாது.

சுதந்திரம் கொடுத்தால் கெட்டுப்போவார்கள் என்ற பயம் பல பெற்றோர்களுக்கு இருக்கிறது

குழந்தைகள் மீது நம்பிக்கை இல்லாதபோது பயம் வருகிறது. குழந்தைகளை பொறுப்பாக வளர்த்து அவர்கள் ஆசைகளை கவுரவித்தால் கெட்டுப்போக மாட்டார்கள்.

குழந்தைகள் பெற்றோர்களை பார்த்து வளர்கிறார்கள். எனவே அவர்களுக்கு ஒரு புத்தகம் மாதிரி நாம் இருக்க வேண்டும்.

முதல் மனைவியுடன்

நான் மீண்டும் திருமணம் செய்தபோது எனது பெரிய மகளுக்கு 14 வயது. என் அப்பா, தங்கை, மகள் 3 பேரையும் உட்கார வைத்து போனி வர்மாவை அழைத்து வந்து இவரை திருமணம் செய்து கொள்ளப் போகிறேன் என்றதும் எனது மகள் சம்மதம் சொன்னாள். ஆனால் எனது அம்மா அழுதுவிட்டார்.

என் குடும்பத்தில் நிறைய பெண்கள் உள்ளனர். எல்லோருக்கும் மீண்டும் திருமணம் செய்து கொள்வது பற்றி விளக்க வேண்டிய பொறுப்பு எனக்கு இருந்தது.

என் முதல் மனைவி லதாவும் இரண்டாவது மனைவி போனியும் குழந்தைகள் விஷயத்தில் தோழிகளாகி விட்டனர். லதாவுக்கு நான் மட்டும்தான் விவாகரத்து கொடுத்தேன். எனது குழந்தைகளும் அம்மாவும் விவாகரத்து கொடுக்கவில்லை.

லதாவுக்கும் எனக்கும் பிரச்சினை இருந்தது. பொய்களுடன் சேர்ந்து வாழக்கூடாது என்று பிரிந்து விட்டோம். நான் நேர்மையாக இருக்கிறேன். லதாவும் நானும் வெளிப்படையாக பேசி பிரிந்தோம்.

இதையெல்லாம் பார்த்தே எனது குழந்தைகள் வளர்ந்தனர். குழந்தைகளுடன் நிறைய மனம் விட்டு பேசுவது அவர்களை நம்முடன் நெருங்க வைக்கும் என்று கூறியுள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers