நீ யார் மகன்னு தெரியுமில்ல.. ஜாக்கிரதையா இரு! ரஜினிகாந்தின் மிரட்டல் வாழ்த்து

Report Print Kabilan in பொழுதுபோக்கு

ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் மகனுக்கு, நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்து வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

நடிகர் ரஜினிகாந்த் தற்போது மும்பையில் நடைபெற்று வரும் ‘தர்பார்’ படத்தின் படப்பிடிப்பில் உள்ளார். இந்தப் படத்திற்கு புகழ்பெற்ற ஒளிப்பதிவாளர் சந்தோஷ்சிவன் ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்நிலையில், சந்தோஷ் சிவனின் மகன் அப்புவுக்கு இன்று பிறந்தநாள் என்பதால், ரஜினிகாந்த் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், ‘பிறந்தநாள் வாழ்த்துக்கள் அப்பு. இப்போது நீ பதின்பருவத்தில் இருக்கிறாய். வாழ்க்கையை நன்றாக அனுபவி. அதேபோல் படிப்பையும் தான். நீ யாருடைய மகன் என்று உனக்கு தெரியும். கவனமாக இரு. உலகம் உன்னை பார்த்துக் கொண்டிருக்கிறது’ என சிரித்தபடியே தெரிவித்துள்ளார்.

தற்போது ரஜினிகாந்தின் இந்த வாழ்த்து வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்