விருப்பத்திற்கு மாறாக ஆபாசமாக பேசுகிறார்.. என் உயிருக்கு ஆபத்து! நடிகை நிலானி புகார்

Report Print Kabilan in பொழுதுபோக்கு

தமிழ் திரைப்படங்களிலும், தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வரும் நடிகை நிலானி, நபர் ஒருவர் தனக்கு திருமண ஆசை காட்டி தவறாக நடந்துகொள்வதாக புகார் அளித்துள்ளார்.

தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வரும் நடிகை நிலானி, சின்னத்திரை உதவி இயக்குநரான காந்தி என்பவரை காதலித்து வந்தார். இருவரும் காதலித்த நிலையில் காந்தி திடீரென கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தற்கொலை செய்து கொண்டார்.

மேலும், அவரது தற்கொலைக்கு காரணம் நடிகை நிலானிதான் என்று பரபரப்பான தகவல் வெளியானது. அதனைத் தொடர்ந்து, நிலானி விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றார். பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் உயிர் பிழைத்தார்.

இச்சம்பவம் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், நடிகை நிலானி பொலிசாரிடம் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் தனக்கு நபர் ஒருவர் தன்னை ஆபாசமாக படமெடுத்து வைத்துக் கொண்டு மிரட்டுவதாக குறிப்பிட்டுள்ளார்.

நிலானி தனது புகாரில், ‘கடந்த ஆண்டு என்னை பற்றி பரபரப்பான செய்திகள் வெளியான நேரத்தில் எனது செல்போன் எண்களும் வெளியானது. அப்போது பலர் என்னிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் அளிக்கும் வகையில் பேசினர். ஒரு சிலர் ஆபாசமாகவும் பேசினர்.

இந்நிலையில் வெளிநாட்டில் இருந்து பேசுவதாக கூறி மஞ்சுநாதன் என்பவர் என்னிடம் பேசினார். தனக்கு திருமணம் ஆகவில்லை என்றும், இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என்றும் கூறினார். இதற்கு நானும் சம்மதித்தேன். இதன் பின்னர் அடிக்கடி தொலைபேசியில் பேசினோம்.

நேரிலும் சந்தித்தோம். ஆனால் அவருக்கு திருமணம் ஆகி மனைவி இருக்கிறார். இதனால் நான் அவரை திருமணம் செய்ய முடியாது என்று கூறிவிட்டேன். இதனால் ஆத்திரம் அடைந்த மஞ்சுநாதன் உன்னை ஆபாசமாக படம் எடுத்து வைத்துள்ளேன் என்று மிரட்டுகிறார். நான் கூறுவது போல் கேட்காவிட்டால், உனது ஆபாச படங்களை இணைய தளங்களில் வெளியிட்டு விடுவேன் என்றும் அவர் மிரட்டல் விடுத்துள்ளார்.

இதுவரை 10 ஆயிரம் கைப்பேசிகளில் இருந்து எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கைப்பேசியில் பேசும்போது எனது விருப்பத்திற்கு மாறாக ஆபாசமாக பேசுகிறார். அவரால் எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. எனவே பொலிசார் என்னை மிரட்டும் மஞ்சுநாதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்