அவர்களை நடுரோட்டில் தூக்கிலிடுவதே ஒரே தீர்வு! கொந்தளித்த நடிகை விஜயசாந்தி

Report Print Kabilan in பொழுதுபோக்கு

பெண்களை மானபங்கப்படுத்துவோரை நடுரோட்டில், பொதுமக்கள் கூடியிருக்கும் பொது இடத்தில் தூக்கிலிடுவது தான் ஒரே தீர்வு என்று நடிகை விஜயசாந்தி ஆவேசமாக தெரிவித்துள்ளார்.

நடிகை விஜயசாந்தி இன்று தனது பிறந்தநாளை கொண்டிய நிலையில், பெண்களை மானபங்கப்படுத்துவோர் குறித்து கடுமையாக விளாசியுள்ளார். அவர்களுக்கு மிகவும் கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

இதுதொடர்பாக மேலும் நடிகை விஜயசாந்தி கூறுகையில், ‘என்னை யாராவது அவதூறாக பேசினால் முதலில் போடா என்பேன். அதற்கும் அதிகமாக ஏதாவது செய்தால் போராடுவேன். பெண்கள் என்றால் விளையாட்டு பொம்மையாக ஆக்கிவிட்டனர்.

நிஜ வாழ்க்கையிலும், சமூக வலைதளத்திலும் எங்கு பார்த்தாலும் வெட்கமில்லாமல், பயமில்லாமல் பெண்களிடம் பெண்மையை துகிலுரித்து வருகின்றனர். பெண்களை மானபங்கப்படுத்துவோரை நடுரோட்டில், பொதுமக்கள் கூடியிருக்கும் பொது இடத்தில் தூக்கிலிடுவது தான் ஒரே தீர்வு.

இந்த சமூகம் எந்த வழியை நோக்கி போகிறதோ தெரியவில்லை. ஒரு வாரத்திற்கு முன், தெலுங்கானாவில் 9 மாத குழந்தையை கற்பழித்து கொலை செய்த காம கொடூரனை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இதுபோன்றவர்களை நடுரோட்டில் சுட்டுத்தள்ள வேண்டும். தூக்கிலிட வேண்டும்.

அப்போது தான் அந்த குழந்தையின் ஆத்மா சாந்தியடையும். ஆண்டு கணக்கில் விசாரணை என்ற பெயரில் தள்ளிப்போடாமல், உடனடியாக தண்டனை கொடுத்தால் தான் இதுபோன்ற தவறு தான் செய்ய இன்னொருவருக்கு துணிவு வராது. அரசாங்கம் சமூக வலைதளத்துக்கு புதிய சட்டம் கொண்டுவர வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers