ஒரே நாளில் சமூகவலைத்தளங்களையே திரும்பி பார்க்க செய்த அந்த ஈழத்தமிழ் பெண் யார் ?

Report Print Kavitha in பொழுதுபோக்கு

பிக் பாஸ் தமிழ் 3 வது சீசன் நிகழ்ச்சியின் தொடக்க விழா வெகு பிரம்மாண்டமாக நேற்று ஆரம்பமாகியுள்ளது.

இந்நிலையில் இந்தபோட்டியில் யாரும் எதிர்பாராத விதமாக இலங்கையை சேர்ந்த பிரபல தொலைக்காட்சியின் செய்தி வாசிப்பாளர் கலந்து கொண்டது மக்களை பெரும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

ஈழத்தமிழ் பெண்ணான கிளிநொச்சியில் பிறந்து, திருகோணமலையில் தனது கல்வியை முடித்தவர் தான் லொஸ்லியா.

தனது கல்வி படிப்பை முடித்த பின்னர் கொழும்பில் ஒரு தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்துள்ளார்.

இதன் போது லொஸ்லியா சிறுவயதில் போரின் போது புலம் பெயர வேண்டிய சூழல் ஏற்பட்டது எனவும் வீட்டில் 4 பெண்கள் என்பதனால் பிள்ளைகளை சிறப்பாக வளர்த்த தந்தை வேலை நிமித்தமாக வெளிநாடு சென்றுவிட்டார். இதனால் பல இடர்பாடுகளுக்கிடையே தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது என உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.

இதே சமயத்தில் இலங்கை யாழ்பாணத்தில் பிறந்த தர்‌ஷன் பிரபல ஐடி நிறுவனத்தில் மென் பொறியாளராக பணியாற்றி வந்தவரும் பங்கேற்றமை இலங்கை மக்களை பெரிதும் பெருமைப்படுத்தும் விதமாக பிக்பாஸ் 3 இருந்தது எனவும் மக்கள் கூறியுள்ளனர்.

மேலும் லொஸ்லியாவின் புகைப்படங்களும், வீடியோக்களும் ,மீம்களும் தற்சமயம் சமூகவலைத்தளங்களில் தீயாய் பரவி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers