நடிகர் விவேக், நடிகர் சங்க தேர்தலி வாக்களித்தபின் பேசிய ஒருவர்த்தை வைராலாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
நடிகர் சங்க தேர்தல் கடந்த 23ஆம் திகதி சென்னையில் நடைபெற்றது. இதில் பெரிய நடிகர்கள் முதல் சிறிய நடிகர்கள் வரை அனைவரும் வாக்களித்தனர். இந்நிலையில், நடிகர் விவேக் வாக்களித்தப்பின் பேசும் போது, ஊடகங்கள் நடிகர் சங்க தேர்தலை பார்ப்பதை விட மரம் வளப்பிற்கும், தண்ணீர் பிரச்சனை தீர்வுக்கு அதிகம் முக்கியதுவம் வழங்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் ”#தமிழகம்காக்க_மரம்வளர்ப்போம் ” என்ற ஹாஷ்டாக் இந்திய அளவில் டிரெண்ட் ஆனாது.
இது குறித்து தனியார் தொலைக்காட்சிக்கு நடிகர் விவேக் அளித்த பேட்டியில், இதற்கு ஊடகங்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும், மரம் வளர்ப்பது இளைஞர்கள் ஒன்று கூடி ஏரி குளங்களை தூர்வாருவது மட்மே நமக்கான சரியான தீர்வு என்று தெரிவித்துள்ளார்.