கின்னஸ் சாதனை படைத்த பழம்பெரும் தமிழ்பட நடிகை விஜயநிர்மலா காலமானார்! திரையுலகினர் இரங்கல்

Report Print Kabilan in பொழுதுபோக்கு

அதிக படங்களை இயக்கி கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற தெலுங்குபட பெண் இயக்குநரும், பழம்பெரும் நடிகையுமான விஜயநிர்மலா(73) உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.

எங்க வீட்டு பெண், சித்தி, சோப்பு சீப்பு கண்ணாடி, என் அண்ணன், ஞான ஒளி உட்பட பல தமிழ் படங்களில் சிவாஜி, எம்.ஜி.ஆர் என அப்போதைய முன்னணி நாயகர்களுடன் நடித்தவர் பழம்பெரும் நடிகை விஜயநிர்மலா.

‘பணமா பாசமா’ என்ற படத்தில் எலந்தப்பழம் பாடல் மூலம் பிரலமடைந்த இவர், சுமார் 200 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். அத்துடன் 44 திரைப்படங்களை இயக்கியுள்ளார். இதன்மூலம் அதிக படங்களை இயக்கிய பெண் இயக்குநர் என்று கின்னஸ் புத்தகத்திலும் இடம்பெற்றுள்ளார்.

தெலுங்கு நடிகரும், மகேஷ்பாபுவின் தந்தையுமான கிருஷ்ணாவை இரண்டாவது மனைவியாக மணந்துகொண்டார் விஜயநிர்மாலா. இவர்களது மகன் நரேஷும் படங்களில் நடித்து வருகிறார். சின்னத்திரையிலும் ஜொலித்த விஜயநிர்மலா, வயது மூப்பு காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டார்.

இந்நிலையில் ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்ட விஜயநிர்மலா, இன்று அதிகாலை மாரடைப்பால் காலமானதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அவரது மறைவுக்கு திரையுலகினர், முன்னணி பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers