மீண்டும் இந்திய அணிக்கு அந்த ஜெர்சி தான் வேண்டும்! பிரபல நடிகை வேண்டுகோள்

Report Print Kabilan in பொழுதுபோக்கு

இந்திய கிரிக்கெட் அணியின் ஆடையாக மீண்டும் நீல நிற ஜெர்சியே வேண்டும் என பிரபல ஹிந்தி நடிகை ஹுமா குரேஷி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான உலகக்கோப்பை லீக் போட்டி, நேற்றைய தினம் எட்ஜ்பாஸ்டனில் நடந்தது. இந்தப் போட்டியில் 31 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை இங்கிலாந்து வீழ்த்தியது.

நேற்றைய போட்டியில் இந்திய அணி வீரர்கள் ஆரஞ்சு மற்றும் கருநீலம் கலந்த ஜெர்சியை அணிந்து விளையாடினார். இந்நிலையில், இந்திய அணியின் தோல்விக்கு பிறகு பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன.

Reuters

குறிப்பாக, இந்திய அணியின் வழக்கமான சீருடையை மாற்றியது தான் தோல்விக்கு காரணம் என்று பலர் கூறி வருகின்றனர். இந்நிலையில், ஹிந்தி நடிகை ஹுமா குரேஷி ஜெர்சி குறித்து ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

அதில் அவர் கூறுகையில், ‘இது மூடநம்பிக்கை எல்லாம் இல்லை. ஆனால், தயது செய்து மீண்டும் Blue ஜெர்சியே வேண்டும், அவ்வளவுதான்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers