இயக்குநர் சங்க தலைவர் பதவியில் இருந்து பாரதிராஜா திடீர் விலகல்!

Report Print Kabilan in பொழுதுபோக்கு

பிரபல தமிழ்பட இயக்குநர் பாரதிராஜா இயக்குநர் சங்க தலைவர் பதவியில் இருந்து விலகியிருப்பது, தமிழ் திரைப்படத்துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த மாதம் நடைபெற்ற இயக்குநர் சங்க பொதுக்குழுவில், மூத்த இயக்குநர் பாரதிராஜா சங்கத்தின் தலைவராக போட்டியின்றி ஒரு மனதாக தெரிவு செய்யப்பட்டார்.

இந்நிலையில், தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறுகையில், ‘கடந்த மாதம் நடைபெற்ற நமது சங்க பொதுக்குழுவில், நமது சங்க நிர்வாகிகள், இயக்குநர்கள், இணை, துணை, உதவி இயக்குநர்கள் பேராதரவுடன் போட்டியின்றி என்னை தலைவராக தேர்ந்தெடுத்ததற்கு மிகவும் நன்றி.

ஆனால், தேர்தலில் போட்டியிடாமல் ஒரு பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டால், அதனால் ஏற்படும் சங்கடங்களை நான் நன்கு உணர்ந்துள்ளேன். ஆகையால் ஜனநாயக முறைப்படி தலைவரை தேர்ந்தெடுக்க வசதியாக, எனது தலைவர் பதவியை ராஜினாமா செய்ய முன் வந்துள்ளேன்.

ஒரு மூத்த இயக்குநராக நமது சங்க வளர்ச்சிக்கும், உறுப்பினர்களின் எதிர்கால வளர்ச்சிக்கு எனது வழிகாட்டுதலும், பேரன்பும் என்றும் தொடரும்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers