நடிகை ஸ்ரீதேவியின் மரணம் நிச்சயமாக திட்டமிட்ட கொலையே... டிஜிபி வெளியிட்ட திடுக்கிடும் தகவல்

Report Print Basu in பொழுதுபோக்கு

புகழ்பெற்ற நடிகை ஸ்ரீதேவியின் மரணம் ஒரு திட்டமிட்ட கொலை என கேரள டிஜிபி ரிஷிராஜ் சிங் கூறியுள்ளது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரள காவல்துறையின் மருத்துவ ஆலோசகராகவும், தடயவியல் மருத்துவ பேராசிரியராகவும் விளங்கிய டாக்டர் உமாநாத் கடந்த புதன்கிழமை அன்று காலமானார். இந்நிலையில், மறைந்த உமாநாத்தின் நண்பரான டிஜிபி ரிஷிராஜ் சிங், அவருடனான நினைவுகளைப் பகிரிந்துள்ளார்.

ஸ்ரீதேவியின் மரணம் குறித்து டாக்டர் உமாநாத் கூறியதை, ரிஷ்ராஜ் சிங் வெளி உலகத்திற்கு பகிர்ந்துள்ளார். நடிகை ஸ்ரீதேவி அதிகமாகக் குடித்துவிட்டு குளியலறையில் மூழ்கியதாகத்தான் கூறப்படுகிறது. அப்படியே அவர் அதிகமாகக் குடித்திருந்தாலும், வெறும் ஒரு அடி உயரமே இருக்கும் தண்ணீரில் மூழ்கியிருக்க முடியாது.

வேறு ஒருவர் அவரது தலையை தண்ணீரில் பிடித்து அழுத்தினால் தவிர, ஒரு அடி தண்ணீரில் நிச்சயம் நடிகை மூழ்கி உயிரிழந்திரக்க முடியாது என்று தெரிவித்ததாக டிஜிபி கூறியுள்ளார்.தேவையான ஆதாரங்கள் கிடைக்காததால் ஸ்ரீதேவியின் மரணம் மர்ம மரணமாகவே முடிந்துவிட்டது என்று கூறியுள்ளார் டிஜிபி ரிஷிராஜ் சிங்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்