நடிகை ஸ்ரீதேவியின் மரணம் கொலையா? டிஜிபிக்கு கணவர் போனி கபூர் கூறிய பதில்!

Report Print Kabilan in பொழுதுபோக்கு

பிரபல நடிகை ஸ்ரீதேவியின் மரணம் விபத்து அல்ல, கொலை என்று கேரள மாநில முன்னாள் டிஜிபி கூறிய கருத்துக்கு தயாரிப்பாளரும், ஸ்ரீதேவியின் கணவருமான போனி கபூர் பதிலளித்துள்ளார்.

கேரள மாநில முன்னாள் டிஜிபி ரிஷிராஜ் சிங், சில நாட்களுக்கு முன்பு நடிகை ஸ்ரீதேவியின் மரணம் குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் கிடைத்த தடயங்கள், அவரது மரணம் விபத்து அல்ல என்று தெரிவிப்பதாக பேட்டியளித்தார்.

இதனை மறைந்த தடயவில் நிபுணர் உமாநாதன் தன்னிடம் கூறியதாகவும், ஸ்ரீதேவி தண்ணீரில் நிச்சயம் மூழ்கி உயிரிழந்திருக்க முடியாது என்று அவர் கூறியதாகவும் தெரிவித்தார். இந்த விடயம் பரபரப்பை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், ‘இது போன்ற முட்டாள்தனமான கதைகளுக்கு நான் பதிலளிக்க விரும்பவில்லை. இது போன்ற கதைகள் தொடர்ந்து வந்துகொண்டு தான் இருக்கும். அதனால் இதற்கு பதிலளிக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்தக் கதை ஒருவரின் கற்பனை மட்டுமே’ என தெரிவித்துள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...