தாயின் முன்பே புகைப்பிடித்த பிரியங்கா சோப்ரா! வைரலான புகைப்படத்தால் சர்ச்சை

Report Print Kabilan in பொழுதுபோக்கு

நடிகை பிரியங்கா சோப்ரா தனது குடும்பத்தினருடன் சேர்ந்து புகைபிடிக்கும் புகைப்படம், சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அமெரிக்காவின் மியாமியில் கடந்த 18ஆம் திகதி, நடிகை பிரியங்கா சோப்ரா சொகுசு கப்பல் ஒன்றில் தனது பிறந்தநாளை கொண்டாடினார். அவருடன் கணவர் நிக் ஜோன்ஸ், தாய் மதுசோப்ரா உள்ளிட்ட பலர் இருந்தனர்.

ஆனால் இதில் சர்ச்சையான விடயம் என்னவென்றால், பிரியங்கா சோப்ரா அவரது தாய் மது சோப்ரா மற்றும் நிக் ஜோன்ஸ் ஆகியோர் புகைபிடித்தது தான். அதுவும் தாயின் முன்பாகவே அவர் சாதாரணமாக புகைபிடிக்கிறார்.

கடந்த ஆண்டு தீபாவளியின் போது பிரியங்கா சோப்ரா ட்வீட் ஒன்றை பதிவிட்டார். அதில் தீபாவளிக்காக பட்டாசுகளை வெடிக்காமல் இனிப்புகளையும், அன்பையும் பரிமாறிக் கொள்ள வேண்டும் என்றும், பட்டாசுகளின் புகையால் ஆஸ்துமா நோயாளிகள் துன்புறுவதாகவும் தெரிவித்திருந்தார்.

அத்துடன் தானே ஓர் ஆஸ்துமா நோயாளி எனவும், அதையும் கடந்து வாழ்க்கையில் வெற்றி பெற்றுள்ளதாகவும் தெரிவித்திருந்தார். ஆனால், தனது திருமண விழாவுக்காக ஏராளமான பட்டாசுகளை வெடித்துக் கொண்டாடினார். அப்போது சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.

இந்நிலையில் ஆஸ்துமா நோயாளி என்று கூறிவிட்டு, சிகரெட் புகைப்பதை ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். அத்துடன் குடும்பத்துடன் பிரியங்கா சோப்ரா புகைபிடிப்பதை பலரும் கிண்டல் செய்து வருகின்றனர்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers