16 வயது இளைய மொடலை மணக்கும் பிரபஞ்ச அழகி.. சம்மதம் தெரிவித்த மகள்கள்!

Report Print Kabilan in பொழுதுபோக்கு

முன்னாள் பிரபஞ்ச அழகி சுஷ்மிதா சென், தன்னை விட 16 வயது இளையவரான ரோமன் ஷால் என்ற விளம்பர மொடலை திருமணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் இருந்து முதன் முதலாக பிரபஞ்ச அழகி பட்டம் வென்றவர் சுஷ்மிதா சென். ஹிந்தி, தமிழ், தெலுங்கு என பல்வேறு மொழிகளில் கதாநாயகியாக நடித்துள்ள இவருக்கு தற்போது 43 வயதாகிறது.

சமூக பணிகளில் அதிகம் ஈடுபாடு கொண்ட சுஷ்மிதா சென், இரண்டு பெண் பிள்ளைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். இந்நிலையில், விளம்பர மொடலான ரோமன் ஷால் என்பவரை சுஷ்மிதா சென் திருமணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இருவருக்கும் 16 வயது வித்தியாசம் உள்ளது. இவர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர். அத்துடன் தங்களது டேட்டிங் புகைப்படங்களை அவ்வப்போது சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தான் இவர்களின் திருமணம் வரும் நவம்பர் மாதம் நடைபெற இருப்பதாகவும், சுஷ்மிதாவின் மகள்கள் இந்த திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

மேலும் திருமண வேலைகள் ஆரம்பித்துவிட்டதாகவும், மகள்கள் எந்தவித நிபந்தனைகளையும் விதிக்கவில்லை என்பதால் சுஷ்மிதா மகிழ்ச்சியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்