நரகத்தில் வாழ்கிறேன்.. இவர் தான் என்னை காப்பத்தனும்... விஜய் பட கதாநாயகி வெளியிட்ட கண்ணீர் வீடியோ

Report Print Raju Raju in பொழுதுபோக்கு

நடிகை விஜயலட்சுமி கண்ணீர் மல்க பேசி வெளியிட்ட வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது.

தமிழில் நடிகர் விஜய், சூர்யாவுடன் பிரண்ட்ஸ், மில்லிட்டரி, சூரி, எஸ் மேடம் போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளவர் விஜயலட்சுமி.

இவர் ஏராளமான கன்னட திரைப்படங்களிலும் நடித்துள்ளார். விஜயலட்சுமிக்கு பட வாய்ப்புகள் குறைந்த நிலையில், உடல்நலக் குறைவால் அவதிப்பட்டார்.

அவருக்கு உயர் ரத்த அழுத்த பிரச்சனை உள்ள நிலையில் பெங்களூருவில் சிகிச்சை எடுத்து கொண்டார்.

அந்த சமயத்தில், விஜயலட்சுமிக்கு திரையுலகினர் உதவிக்கரம் நீட்ட வேண்டும் என்று அவரது சகோதரி வேண்டுகோள் விடுத்திருந்தார்.

அதன்படி திரைப்பிரபலங்கள் சிலர் தங்களால் இயன்ற உதவிகளை செய்திருந்தனர்.

இந்நிலையில், தனது தாயாருக்கும், குடும்பத்துக்கும் உதவ வேண்டும் என்று விஜயலட்சுமியே வேண்டுகோள் விடுத்து வீடியோ வெளியிட்டுள்ளார். இது சம்பந்தமாக பேசி ஒரு வீடியோவும்

அதில், நான் ஒவ்வொரு நிமிடமும் நரகத்தில் இருக்கிறேன், நான் அழிஞ்சு போகணும்னு நிறைய பேர் நினைக்கிறாங்க.

ரஜினி சார் என் குடும்பம் இப்போ சொல்ல முடியாத கஷ்டத்துல இருக்கு. இதை நீங்கள் மட்டுமே சரி செய்ய முடியும்.

ஆனா, என்னை யாரும் அவரிடம் அழைத்து செல்லவில்லை.

அதனால தான் இந்த வீடியோ வெளியிடுகிறேன். இதை ரஜினிக்கு எப்படியாவது காட்டுங்கள் என்று கூறியுள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்