ரஜினி பற்றிய கேள்வியை ஒளிபரப்பாத பிக்பாஸ்? மூடிமறைத்தது ஏன்?

Report Print Fathima Fathima in பொழுதுபோக்கு

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரஜினியின் அரசியல் பற்றிய கேள்வியையும், கமல்ஹாசன் அளித்த பதிலையும் பிரபல டிவி ஒளிபரப்பாதது ஏன் என மக்கள் நீதி மய்ய கட்சியின் செய்தி தொடர்பாளர் கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த 4ம் திகதி அன்று ஒளிபரப்பான நிகழ்ச்சியில் பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்கள் பிரபலங்களாக மாறி கமலை பேட்டி எடுக்கும் நிகழ்ச்சி ஒளிபரப்பானது.

இதில் ரஜினியாக வேடமிட்டிருந்த சேரன் கேட்ட கேள்வி ஒளிபரப்பாகவில்லை, இதுகுறித்து மக்கள் நீதி மய்ய கட்சியின் செய்தி தொடர்பாளர் முரளி அப்பாஸ் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில், எல்லார் கேட்ட கேள்வியும் வந்து விட்டது, ஆனால் முக்கியமான கேள்வியை விஜய் டிவிகாரர்கள் ஏன் எடுத்தார்கள் என்று தெரியவில்லை.

சேரன் ரஜினியாக மாறி கேட்ட கேள்விக்கும், கமல் சார் சொன்ன பதிலுக்கும் கை தட்டிய ரசிகனாக எனக்கு அது புரியவே இல்லை.சேரன் கமல்ஹாசனிடம் கேட்டது இதுதான்...

வணக்கம் கமல் , நல்லா இருக்கீங்களா? எனக்கு சில அரசியல் கேள்விகள் உங்ககிட்ட இருக்கு. நானும் நீங்களும் ஒரு 40 வரு‌ஷம் நடிகர்களாக பயணம் பண்ணிட்டோம். நாம நடிகர்களாக இருந்தபோது மக்கள் நம்ம கிட்ட என்ன கேட்டார்களோ அத முடிந்த வரைக்கும் சிறப்பா கொடுத்துருக்கோம்.

இப்போது நானும் அரசியலில் குதிக்க நினைத்துக்கொண்டு இருக்கிறேன், நீங்க குதிச்சிட்டீங்க... நடிகர்களாக இருந்து அவர்களை திருப்திபடுத்திய நாம், அரசியல் தலைவர்களாக மாறி, அந்த மக்களின் எதிர்பார்ப்புகள் திருப்தி அடைகிற மாதிரி வேலை செய்ய முடியுமா?

இதற்கு கமல், ‘அவர்கள் எதிர் பார்ப்பதில் ஒன்று, இப்படி நானும் நீங்களும் பேசிக்கொண்டு இருக்கிறோம் என்பது தான். முடியுமான்னு கேட்டீங்கன்னா, முனைந்தால் முடியும். அதற்கு, நான் என்பது நாமானால் கண்டிப்பாக முடியும். இது இந்த ரஜினி(சேரன்) வந்தாலும் சொல்லுவேன், அந்த ரஜினி வந்தாலும் சொல்லுவேன்’ என்றார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers