என் இளமைகாலத்தில் நடந்த பசுமையான விடயம்... மனம் திறந்த பிரபல நடிகை ரேவதி

Report Print Raju Raju in பொழுதுபோக்கு

காஷ்மீரில் இளமை காலத்தில் தான் வாழ்ந்த பசுமையான நினைவுகளை பகிர்ந்து கொண்டுள்ளார் நடிகை ரேவதி.

காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு சட்டப் பிரிவுகள் 370 மற்றும் 35 ஏ ஆகியவை நீக்கப்பட்டுள்ளன. அந்த மாநிலம், ஜம்மு - காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக அங்கு பதற்றம் நிலவி வந்த நிலையில் மீண்டும் இயல்பு நிலைக்கு தேசம் திரும்பி கொண்டிருக்கிறது.

இந்நிலையில் முன்னாள் ராணுவ அதிகாரியின் மகளான நடிகை ரேவதி, காஷ்மீரில் வாழ்ந்த தன் இளமைக்கால நினைவுகள் குறித்து பேசியுள்ளார்.

அவர் கூறுகையில், என் தந்தை ராணுவத்தில் இருந்ததால், இந்தியாவின் பல மாநிலங்களில் வளர்ந்த நான் ஏழாம் வகுப்பில் படிக்கும் போது காஷ்மீரின் பாராமுல்லா பகுதியில் ஆறு மாதங்கள் வசித்தேன்.

ஒருநாள் என் தந்தை அந்த வயதில் எனக்குப் புரியும்படியாக காஷ்மீர் மாநிலத்துல நடக்கிற தீவிரவாதப் பிரச்னைகள் குறித்துச் சொன்னார்.

உலக அளவில் மிகச் சிறந்த சுற்றுலா தலம் அது, காஷ்மீரின் அழகை தொடர்ந்து நாம் பாதுகாக்கனும் என கூறியுள்ளார்

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்