'நீங்கள் சரியான மனநிலையில் இல்லை' எதற்காக நடிகர் மாதவன் இப்படி பதிவிட்டார்?

Report Print Abisha in பொழுதுபோக்கு

சுதந்திர தினம், ரக்ஷாபந்தன், ஆவணி அவிட்டம் ஆகியவற்றிற்கு வாழ்த்து தெரிவித்த நடிகர் மாதவனிடம் ஒருவர் கேட்ட கேள்விக்கு அவர் தக்க பாதிலளித்தது தற்போது வைரலாகி வருகின்றது.

சுதந்திர தினம் அன்று ரக்ஷாபந்தன், ஆவணி விட்டம் ஆகியவை கொண்டாடப்பட்டது. இந்நிலையில் , நடிகர் மாதவன் தனது சமூக வலைதள பக்கத்தில் வாழ்த்துகள் பகிர்ந்திருந்தார். குறிப்பாக அவர் ஒரு புகைப்படமும் வெளியிட்டிருந்தார்.

இது குறித்து நபர் ஒருவர், பதிலளிக்கும் வகையில், இந்து கடவுள் அருகில் சிலுவை உள்ளது. ஆலயங்களில் இந்து கடவுள் புகைப்படம் வைக்கப்படுவதில்லையே நீங்கள் நடத்துவது போலி நாடகம் என்று பதிவிட்டிருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் பதிவிட்ட மாதவன், உங்களை போன்றவர்களின் கருத்துக்கு மதிப்பளிக்க வேண்டிய அவசியம் இல்லை, எனெனில், நீங்கள் முதலில் சரியான மனநிலையில் இல்லை. அந்த சிலுவை அருகில் பொற்கோவில் சிலையை பார்க்க தவறிவிட்டீர்கள். அதை பார்த்தால் நான் சீக்கிய மதத்திற்கு மாறிவிட்டேன் என்று கூறுவீர்கள்.

இதில் இருக்கும் பொருட்கள் பாதிக்கு மேல் எனக்கு பரிசாக கிடைத்தது. எனக்கு எம்மதமும் சம்மதம் என்று கற்று தரப்பட்டுள்ளது. நான் கிறிஸ்தவம் இஸ்லாமியர் குருத்துவாரா வழிபாட்டு தலங்களில் சென்று பிரார்த்தனை செய்திருக்கின்றேன். அனைத்திடத்திலும் எனக்கு அன்பு கிடைத்திருகின்றது. அந்த அன்பை உங்களுக்கும் தருகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்