என் மேல் அன்பு வைத்திருக்கும் ஈழத்தமிழர்களை இழக்கமாட்டேன்.. உருக்கத்துடன் பேசிய விஜய்சேதுபதி!

Report Print Kabilan in பொழுதுபோக்கு

முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிப்பது குறித்து பேட்டியளித்துள்ளார் நடிகர் விஜய்சேதுபதி.

இலங்கை கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு படத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடிக்கிறார்.

இதற்கு முரளிதரன் வாழ்த்து தெரிவித்தார், ஆனால் ஈழத்தமிழர்கள் இந்தப் படத்தில் விஜய் சேதுபதி நடிக்கக் கூடாது என கோரிக்கை வைத்தனர்.

இந்நிலையில் விகடன் நாளிதழுக்கு பேட்டியளித்த விஜய்சேதுபதி,

‘சிறுவயதில் இருந்து நான் கிரிக்கெட் பார்த்தது இல்லை. முரளிதரனை பார்க்கும்போது இதை நான் அவரிடம் கூறினேன். கற்பனையான கதை என்றால், அதற்கான கதாபாத்திரத்தை ஓரளவு நியாயப்படுத்தலாம். ஆனால், இது ஏற்கனவே இருக்கிற ஒருத்தரைப் பற்றிய கதை.

இதை எப்படி பண்ணப்போறேன்னு தெரியலை. படம் முழுக்கவே கிரிக்கெட்டைப் பற்றியது மட்டுமல்ல, அவருடைய வாழ்க்கையின் முக்கியமான அங்கமாக இருக்கும்’ என தெரிவித்துள்ளார்.

அதன் பின்னர் இந்தப் படம் தொடர்பாக ஈழத்தமிழர்கள் வைத்த விமர்சனம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், ‘என் மேல் அன்பு வைக்கிறவர்கள் யாரையும் நான் இழக்க மாட்டேன். அப்படி இழக்கிற மாதிரியான ஒரு காட்சி கூட இந்தப் படத்தில் இருக்காது.

என் மேல அன்பு செலுத்தறவங்களைக் காயப்படுத்துற வேலையை நான் எப்படி செய்வேன்? நான் அவ்வளவு சுயநலமான ஆள் கிடையாது. படம் வந்தால் இது மக்களுக்கு புரியும் என்று நம்புகிறேன்.

இதையும் மீறி, காயப்படுத்துற மாதிரி நான் நடந்துகொண்டால், சின்ன குழந்தையாக இருந்தால் கூட மன்னிப்பு கேட்கிறதுக்கு நான் தயங்க மாட்டேன்’ என்று தெரிவித்துள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்