நடிகர் விஷாலின் திருமணம் முடங்கியது? புகைப்படங்களை நீக்கிய அனிஷா!

Report Print Arbin Arbin in பொழுதுபோக்கு

நடிகர் விஷால் மற்றும் அனிஷா ரெட்டியின் திருமணம் முடங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஏபரல் மாதம் விஷால் மற்றும் அனிஷா ரெட்டியின் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. எதிர்வரும் அக்டோபரில் இருவரும் திருமணம் செய்து கொள்வதாகவும் முடிவு செய்யப்பட்டது.

தற்போது விஷாலுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை அனிஷா சமூக வலைதள பக்கத்தில் இருந்து நீக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்தது அனிஷாவா அல்லது விஷாலா என்பது தொடர்பில் எந்த உறுதியான தகவலும் வெளியாகவில்லை.

திரைப்படம் ஒன்றின் படப்பிடிப்பின் போது விஷாலை சந்தித்துள்ளார் அனிஷா. பின்னர் இருவரும் காதலில் விழுந்துள்ளனர்.

விஷாலுடனான காதலை இருவரும் ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவு செய்தே சமூக வலைதளத்தில் அனிஷா பகிர்ந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்