புடவையில் அழகாக விழாவுக்கு வந்த ஸ்ரீதேவி மகள்.. அறிவு இல்லை என விளாசிய நெட்டிசன்கள்

Report Print Kabilan in பொழுதுபோக்கு

புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட நடிகை ஜான்வி கபூரை பலரும் கிண்டல் செய்துள்ளனர்.

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர், புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் கலந்து கொண்டார். ஹரிந்தர் சிக்கா எழுதிய காலிங் செஹ்மத் என்ற புத்தகத்தின் ஹிந்தி பதிப்பு வெளியிடப்பட்டது.

டெல்லியில் நடந்த இந்த விழாவில் புடவை அணிந்து வந்த அவர் அழகாக தோன்றினார். ஆனால், அவர் புத்தகத்தை வெளியிட்டபோது அதை அவர் தலைகீழாக பிடித்திருந்தார்.

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகின. இதனை கவனித்த நெட்டின்சன்கள், ஜான்விக்கு அழகு மட்டும் தான் உள்ளது, அறிவு இல்லை. தாய் பிரபல நடிகை என்பதால் ஜான்வி நடிகையாகிவிட்டார் என்று கிண்டல் செய்து வருகின்றனர்.

எனினும், ஜான்வியின் ரசிகர்களோ தவறு செய்வது மனித இயல்பு என்றும், புடவையில் அவர் எவ்வளவு அழகாக இருக்கிறார்கள் பாருங்கள் என்றும் தெரிவித்துள்ளனர்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்